விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை: சேலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
13:55

சேலம்: சேலத்தில், நேற்று முன்தினம் இரவு துவங்கி, நேற்று காலை வரை, விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால், மக்கள் அவதிப்பட்டனர்.


தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இயல்பை விட குறைவான மழையே பெய்து வந்ததால், நீர் நிலைகள் வற்றும் நிலைக்கு தள்ளப்பட்டன. நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை, இயல்பை விட அதிகளவில் பெய்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், சேலம் மாவட்டத்தில் மழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து கொட்டிய மழையில், சேலத்தில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. ஏற்காடு மலைப்பகுதிகளில், பல இடங்களில் திடீர் அருவிகள் உருவாகின. இதனால், ஏற்காடு மலையடிவாரத்தில் அமைந்துள்ள புது ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. கடந்த, 2015க்கு பின், போதிய மழை இல்லாததால், வறண்டு கிடந்த புது ஏரியில் தண்ணீர் நிரம்ப தொடங்கியுள்ளது. அதே போல், ஏற்காடு மலையிலிருந்து வடியும் மழைநீர், கோரிமேடு ஏ.டி.சி., நகர் பகுதியில் உள்ள கால்வாயில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால், கோரிமேடு பகுதியிலிருந்து பெரிய புதூர் செல்லும் வழி துண்டிக்கப்பட்டுள்ளது. கன்னங்குறிச்சி மூக்கனேரியும், நிரம்பும் தருவாயில் உள்ளது. புது ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறினால், மூக்கனேரிக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், இன்னும் ஓரிரு தினங்களில், மூக்கனேரியும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடிய விடிய பெய்த கனமழையால், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றில் மழைநீரை விட அதிகமான கழிவுகள் கலந்துள்ளதால், தண்ணீர் கறுப்பாக பாய்ந்தோடுகிறது. வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரை செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள் பாலங்களில் தேங்கியுள்ளன. உத்தமசோழபுரம் ஆத்துக்காடு பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து, நுரை பொங்கி வழிந்தோடுகிறது. இதனால் பாலத்தை கடக்க முடியாமல், மக்கள் அவதிப்பட்டனர். இதே போல், ஆட்டையாம்பட்டி அருகே இனாம் பைரோஜி புதுப்பாளையம் ஏரியில் இருந்து, நாமக்கல் மாவட்டம் மின்னக்கல் செல்லும் சாலையில், திருமணிமுத்தாற்று தரைப்பாலத்தை வெள்ள நீர் மூழ்கடித்து ஓடுவதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


சேலத்தில் 66. மி.மீ., மழை: சேலம் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணியுடன் முடிந்த, 24 மணி நேர மழையளவு விபரம்: அதிகபட்சம் சேலத்தில், 66 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. சங்ககிரி, 34, மேட்டூர், 29.8, ஏற்காடு, 27.8, பெத்தநாயக்கன்பாளையம், 27, இடைப்பாடி, 26.4, காடையாம்பட்டி, 26.4, ஆணைமடுவு, 12, ஓமலூர், 11.1, வீரகனூர், 5, தம்மம்பட்டி, 4.8 மி.மீ., மழை பெய்துள்ளது. வாழப்பாடி, கரியகோவில், கெங்கவல்லி, ஆத்தூர் பகுதிகளில் மழை அறவே பெய்யவில்லை என, வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில், நேற்று காலை, 6:45 மணி வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டேயிருந்தது. இதனால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, நேற்று ஒருநாள் விடுமுறை அறிவித்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். ஏற்காட்டில் பெய்த கனமழையால், மின்தடை ஏற்பட்டு மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாகினர். ஏற்காட்டில் கடும் குளிருடன், மழையும் பெய்வதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X