ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட முயன்ற திருடர்களுக்கு எதுவும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் சிலைமணி. இவர் தேனி மாவட்டம் கம்பத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். குடும்பத்துடன் கம்பத்தில் வசிக்கிறார். இங்குள்ள வீட்டில் சிலைமணியின் தாய் பாக்கியம் 75, வசிக்கிறார். நேற்று முன் தினம் மழை பெய்ததால் பாக்கியம் அருகில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று தங்கினார்.
இதனை பயன்படுத்தி நள்ளிரவில் சிலைமணி வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் பீரோக்களை உடைத்துள்ளனர். அதில் ஒன்றும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். காலையில் வந்து பார்த்த பாக்கியம் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.