கமுதி : கமுதி எட்டுக்கண் பாலம் அருகே எக்ஸ்பிரஸ் சிட்டியில் ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான ஜவுளி கடை, இரு தளங்களாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு, வியாபாரம் முடிந்து கடையை பூட்டி சென்ற ராமகிருஷ்ணன். நேற்று காலை வியாபாரத்திற்காக கடையை திறக்க வந்தபோது கடையின் 'ஷட்டர்கள்' உடைக்கபட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கமுதி போலீசாருக்கு தகவல்அளிக்கப்பட்டுஆய்வு செய்ததில் கடையின் பூட்டை உடைத்து 5 லட்சம்ரூபாய் மதிப்புள்ள ஆடைகள், 5,000ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.