கமுதி : கமுதி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.
கமுதி அருகே கே.வேப்பங்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகள் சரஸ்வதி 37. மாற்றுதிறனாளியான இவருக்கு இன்னும்திருமணம்ஆகவில்லை.இவருக்கும்,இதே ஊரை சேர்ந்த முனியசாமி மகன் அரிராமசந்திரன் என்ற அரியப்பனுக்கும் 45, கடந்த 2ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. அரியப்பனுக்கு திருமணம் முடிந்து 7 குழந்தைகள் உள்ளனர்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தில், சரஸ்வதி கர்ப்பமானார். சரஸ்வதி அரியப்பனிடம் தன்னை திருமணம் செய்யுமாறுகூறியுள்ளார். இதனை ஏற்க அரியப்பன் மறுத்ததால், சரஸ்வதி கமுதி அனைத்து மகளிர்போலீசில் புகார்அளித்தார்.போலீசார் அரியப்பனைகைது செய்தனர்.