திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் தென்னக ரயில்வே மஸ்துார் யூனியன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளை தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். உதவி கோட்ட செயலாளர் செந்தில்குமார் பேசினார். '50 ரயில்வே ஸ்டேஷன்கள் மற்றுமுஅ லாபகரமாக இயங்கும் 150 விரைவு ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 33 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
பணிமனைகளை தனியார், பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்தல் மற்றும் நிரந்தர ஊழியர்களை, ஒப்பந்த ஊழியர்களாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என, வலியுறுத்தி கருப்பு சட்டை, பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, ரயில்வே ஸ்டேஷன், ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கான உத்தரவு நகலை எரித்து, எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பழநி: பழநி ரயில்நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். லாபகரமாக இயங்கும் ரயில்வே துறையில் 150 ரயில்களை தனியார்வசம் ஒப்படைக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 60 வயதுக்கு முன்பே கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தினர். கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.