படையெடுக்கும் பாம்புகள்; மிரட்டும் கொசுக்கள்; பழநி புதுநகரின் பரிதாபம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2019
03:53

பழநி: பழநி புதுநகர் பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றியும், பாம்பு நடமாட்டமும், கொசுக்களின் கொண்டாட்டமும் அதிகரித்துள்ளதால் பலர் வீடுகளை காலி செய்து வருகின்றனர்.



பழநி புதுநகர் சிவன்கோயில் வடக்கு தெரு குடியிருப்பு பகுதியில் அடிப்படைவசதிகள் இல்லை என, அப்பகுதியில் வசிக்கும் நாகலட்சுமி தினமலர் சூப்பர் ரிப்போர்ட்டருக்கு புகார் தெரிவித்தார்.அதன் பேரில் சூப்பர் ரிப்போர்ட்டர் விசாரித்ததில் அது உண்மையென்று தெரிந்தது.


அதன் விவரம்: பழநி சிவகிரிப்பட்டி ஊராட்சி புதுநகர் சிவன்கோயில் வடக்கு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு சாக்கடை கால்வாய் வசதியின்றி ரோட்டில் ஓடும் கழிவுநீரால் புதர்மண்டிக் கிடக்கிறது. கொசுத் தொல்லையால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதுபற்றி வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.


நாகலட்சுமி கூறியதாவது: சாக்கடை வசதியின்றி ரோட்டில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. தேவையான நேரத்தில் மருந்து தெளிக்காததால், கொசுத் தொல்லையால் அவதிப்படுகிறோம். புதர்மண்டிக் கிடபப்தால் பாம்புகள் அடிக்கடி படையெடுக்கின்றன. இதனால் இரவில் வீட்டைவீட்டு வெளியே வருவது இல்லை. பெண்கள், குழந்தைகள் பலர் காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளோம். பலமுறை நேரடியாகவே புகார் அளித்தும் பலனில்லை'' என்றார்.


முகேஷ் என்பவர் கூறுகையில், ''துப்புரவு பணியே செய்வது இல்லை, சாக்கடையில் கழிவுநீர் செல்ல வழியின்றி பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுற்றுச்சுவருக்குள் தேங்கி கிடக்கிறது. சகாதாரக் கேடால் நிம்மதியை இழந்துள்ளோம். சாக்கடை கால்வாய் கட்டித்தர வேண்டும், புதிய ரோடு அமைக்க வேண்டும். கொசுமருந்து அடிக்க வேண்டும்'' என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X