| சின்னாளபட்டியில் வணிக நிறுவனங்களுக்கு அபராதம்; டயர்கள் பறிமுதல் Dinamalar
சின்னாளபட்டியில் வணிக நிறுவனங்களுக்கு அபராதம்; டயர்கள் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2019
03:53

சின்னாளபட்டி : டெங்கு கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைக்காக, சின்னாளபட்டியில் வணிக நிறுவனங்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.


உள்ளாட்சி அமைப்புகளில் டெங்கு கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விழிப்புணர்வு முகாம், குடியிருப்புகளில் கொசுப்புழு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. திறந்தவெளியில் நீர்தேங்கும் அமைப்புகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.


நேற்று சின்னாளபட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் கலையரசி குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகன டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். செயல் அலுவலர் கூறுகையில், ''மழைநீர் தேங்கும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில வணிக நிறுவனங்களில், டயர்கள் உள்ளிட்ட பொருட்களை திறந்த வெளியில் வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது'' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X