| திண்டுக்கல்லில் சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.48.11 கோடி Dinamalar
திண்டுக்கல்லில் சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.48.11 கோடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2019
03:53

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க வேளாண், தோட்டக்கலை துறைக்கு ரூ.48.11 கோடி அரசு ஒதுக்கியுள்ளது.


வறட்சி காலங்கள் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடான பகுதி விவசாயிகள் பயன்பெற பிரதம மந்திரியின் சொட்டு நீர் பாசன திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வேளாண், தோட்டக்கலை

துறைக்கு ஆண்டுதோறும் இதற்காக தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


மழை குறைவு:திண்டுக்கல்லில் கடந்த 3 ஆண்டுகளாக பெய்த மழையளவு குறைவு. அதனால் வேளாண், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி குறைந்து வருகிறது. இதை தவிர்க்க சொட்டு நீர் பாசன வசதியை ஏற்படுத்த திண்டுக்கல் மாவட்டத்திற்கு வேளாண் துறைக்கு ரூ.23.83 கோடி, தோட்டக்கலை துறைக்கு ரூ.24.28 கோடி என, மொத்தம் ரூ.48.11 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் 8,935 எக்டேரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.


நுாறு சதவீதம் மானியம்:சிறு, குறு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீதம், மற்றவர்களுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளோர் சிட்டா அடங்கல், ஆதார் கொண்டு ஆன்லைனில் பதியலாம். முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும். தற்போது திண்டுக்கல்லில் மழை பெய்து வருவதால் உடனே சொட்டு நீர் பாசன வசதியை ஏற்படுத்தி பயன் பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X