| ஒட்டன்சத்திரம் பகுதியில் யூரியாவிற்கு தட்டுப்பாடு: விவசாயிகள் கவலை Dinamalar
ஒட்டன்சத்திரம் பகுதியில் யூரியாவிற்கு தட்டுப்பாடு: விவசாயிகள் கவலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2019
03:53

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக மானாவாரி சாகுபடி மும்முரமாக நடக்கிறது. மக்காச்சோளம், பருத்தி, பூசணி பயிர்களை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். இப்பயிர்களுக்கு தற்போது யூரியா அவசியம் தேவைப்படுகிறது.


உரம் தட்டுப்பாடு:


ஆனால் ஒட்டன்சத்திரம் மற்றும் கள்ளிமந்தையத்தில் யூரியாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு விவசாய வங்கிகளில் இருப்பு இல்லை. தனியார் நிறுவனங்களிலும் யூரியா கிடைக்கவில்லை. உரிய நேரத்தில் யூரியாவில் உள்ள சத்து கிடைத்தால்தான் பயிர்கள் வளரும். எனவே விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


பாலப்பன்பட்டி விவசாயி சின்னச்சாமி கூறுகையில், ''விவசாயிகளுக்கு தேவையான யூரியாவை உடனே தட்டுப்பாடின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X