அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தொகை...அதிகம் 4வது முறையாக ஏலம் போகாத குவாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2019
02:43

மதுரை, :அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தொகை அதிகம் எனக்கூறி ஒப்பந்ததாரர்கள் சிண்டிகேட் அமைத்து முன்வராததால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 4 வது முறையாக நடந்த ஏலத்தில் கல் குவாரிகள் ஏலம் எடுக்கப்படவில்லை.



இம்மாவட்டத்தில் முறைகேடு புகார்களையடுத்து கிரானைட் குவாரிகளுக்கு தடையுள்ளது. அரசு மற்றும் தனியார் பயன்பாட்டிற்காக ஜல்லி, சரளை கற்களை வெட்டி எடுக்க கல் குவாரிகள் மட்டும் ஏலம் விடப்படுகின்றன. மதுரை கிழக்கு, வாடிப்பட்டி, மேலுார், திருமங்கலம், உசிலம்பட்டி தாலுக்காக்களிலுள்ள 31 குவாரிகள் நேற்று 4வது முறையாக பொது ஏலம் விடப்பட்டன.

கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூடத்தில் துணை கலெக்டர் அமர்நாத் தலைமையில், கனிம வளத்துறை துணை இயக்குனர் வேடியப்பன் முன்னிலையில் ஏலம் நடந்தது.

இதற்காக முன்கூட்டியே டெண்டர்கள் வரவேற்கப்பட்டன. ஆனால் ஒருவர் கூட மனு செய்யவில்லை. பொது ஏலத்திலும் குறைந்தளவில் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு குவாரிக்கும் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தொகை அதிகமாக இருப்பதாக கூறி அவர்கள் சிண்டிகேட் அமைத்து ஏலம் எடுக்கவில்லை. குலசேகரன்கோட்டை குவாரி ஒன்று மட்டும் ஏலம் எடுக்கப்பட்டது. அந்த ஏலமும் உயர்நீதிமன்றம் உத்தரவு காரணமாக இறுதி செய்யப்படவில்லை. ஐந்து குவாரிகளுக்கு அரசு நிர்ணயித்த தொகையை விட மிக குறைவான தொகைக்கு ஒப்பந்ததாரர்கள் ஏலம் கேட்டனர்.அதிகாரிகள் கூறியதாவது: ஒப்பந்ததாரர்கள் குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்து அதிக லாபம் ஈட்ட நினைக்கின்றனர். தற்போதைய விலை நிலவரங்களுக்கு ஏற்ப அரசு குறைந்தபட்ச தொகையை நிர்ணயித்தது. கலெக்டர் வினய் மூலம் அரசு ஒப்புதல் பெற்று மறுஏலம் விடப்படும் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-நவ-201904:39:17 IST Report Abuse
தீதும் நன்றும் பிறர் தர வாரா கூட்டு களவாணிகள்.. பேராசை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X