| பிச்சை எடுக்க வைத்தவர் மீது வழக்குபாய்ந்தது! அடிமை போல் நடத்தப்பட்டது அம்பலம் Dinamalar
பிச்சை எடுக்க வைத்தவர் மீது வழக்குபாய்ந்தது! அடிமை போல் நடத்தப்பட்டது அம்பலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 நவ
2019
02:35

மதுரை நகர் சிக்னல்களில் பார்வையற்றோரையும், ஊனமுற்றவோரையும் வேலை க்கு நியமித்து பிச்சை எடுக்க வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யத்துவங்கியுள்ளனர். அடிமை போல் தாங்கள் நடத்தப்பட்டதாக பார்வையற்றோர் கண்ணீர் வடித்துள்ளனர்.



நகரில் காளவாசல், கோரிப்பாளையம், ஆவின் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் சிக்னலுக்காக வாகன ஓட்டிகள் காத்திருக்கும்போது பார்வையற்றோரும், ஊனமுற்றோரும் பிச்சை கேட்பது தொடர்கிறது. ஒரு சிக்னலில் பிச்சை எடுப்பவர், மறுநாள் வேறு ஒரு சிக்னலில் பிச்சை எடுத்து வருவதால் இதை அவர்கள் ஒரு தொழிலாக செய்து வருவது தெரிந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.இதைதொடர்ந்து காளவாசல் சிக்னலில் பிச்சை எடுத்த பார்வையற்ற பாலமேடு ராமமூர்த்தி ராஜாவிடம் போலீசார் விசாரித்த போது, வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனி ராவித்பசிரியா 58, என்பவர் தங்களை அடிமையாக நடத்தி பிச்சை எடுக்க வைப்பதாக கண்ணீர் வடித்தார். ராவித்பசிரியா மீது பிச்சை எடுப்பு தடுப்புச்சட்டத்தின்படி எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.போலீசார் கூறியதாவது: பார்வையற்றோர் பேனா, பத்தி உள்ளிட்ட பொருட்களை விற்று வருகின்றனர். அவர்களிடம் சென்று பணம் சம்பாதிக்க உதவுவதாக கூறி 'மூளைச்சலவை' செய்து பிச்சை எடுக்க வைக்கின்றனர். அதற்கான பிரத்யேக உண்டியலில் பூட்டு போட்டு சாவியை அவர்கள் வைத்துக்கொள்கின்றனர். காலை முதல் மாலை வரை பிச்சை எடுத்த உண்டியலை பெற்றுக்கொண்டு மறுநாள் பிச்சை எடுக்க மற்றொரு உண்டியலை தருகின்றனர். மதியம் சாப்பாடு வாங்கிக்கொடுத்து விடுகின்றனர். பிச்சை எடுத்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை சம்பளமாக தந்து ஏமாற்றி வந்துள்ளனர். முதற்கட்டமாக ராவித்பசிரியா சிக்கியுள்ளார். இதை கூட்டாக செய்கிறார்களா அல்லது தனித்தனியாக செய்கிறார்களா என விசாரித்து வருகிறோம், என்றனர்.மதுரை, நவ.9 -

மதுரை நகர் சிக்னல்களில் பார்வையற்றோரையும், ஊனமுற்றோரையும் வேலைக்கு நியமித்து பிச்சை எடுக்க வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய துவங்கியுள்ளனர். அடிமை போல் தாங்கள் நடத்தப்பட்டதாக பார்வைற்றோர் கண்ணீர் வடித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X