| சூப்பர் ரிப்போட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு Dinamalar
சூப்பர் ரிப்போட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 நவ
2019
04:56



* எரியாத தெருவிளக்குகள்மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர்நகர் 6வது குறுக்குத்தெருவில் பல மாதங்களாக தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- நந்தீஸ்வரன், பழங்காநத்தம்.------* துர்நாற்றம் வீசுகிறதே...மதுரை செல்லுார் அகிம்சாபுரம் 5வது தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. நோய் ஏற்படும் முன் சரிசெய்ய வேண்டும்.-முருகேசன், செல்லுார்.------* குவிந்து கிடக்கும் குப்பைமதுரை மாட்டுத்தாவணி பகுதிகளில் சாலையோரத்தில் குப்பை ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளது. அப்புறப்படுத்த முன்வர வேண்டும்.-சிவா, அண்ணாநகர்.------* வெளிச்சம் இன்றி அவதிமதுரை முனிச்சாலை வெங்கடபதி அய்யங்கார் தெருவில் பல மாதங்களாக தெருவிளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கி உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவக்குமார், முனிச்சாலை.* வீணாகும் குடிநீர்மதுரை பங்கஜம் காலனி 1வது தெருவில் குடிநீர் குழாய் உடைந்து அடிக்கடி தண்ணீர் வீணாகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கற்பக சுந்தரபாண்டியன், பங்கஜம்காலனி.-------* பாலிதீன் பயன்பாடுமதுரை நகரின் பல கடைகளில் பாலிதீன் பைகள் புழக்கத்தில் உள்ளன. இதனை ஒழிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணிவேல், திருப்பாலை.------இருள் மூழ்கி கிடக்குதே...மதுரை வசந்த்நகர் ஆண்டாள்புரத்தில் ரவுத்தர் கோயில் தெருவில் தெருவிளக்குகள் எரியாமல் அப்பகுதிமுழுவதும் இருள் மூழ்கி கிடக்கிறது. நடவடிக்கை எடுப்பார்களா.-முருகேசன், வசந்த்நகர்.------பாசன கால்வாயில் கழிவுநீர்-குப்பைகள்மதுரை அய்யர்பங்களா மற்றும் உச்சிப்பரம்புமேடு நீர்பாசன கால்வாயில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் குவிந்துகிடக்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சரவணன், அய்யர்பங்களா.------துருபிடித்த தண்ணீர் குழாய்மதுரை ஊமச்சிக்குளம் அம்பேத்கர் தெருவில் நடுரோட்டில் தண்ணீர் குழாய் துருபிடித்து பயன்படாமல் உள்ளது. புதிய குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பன்னீர்செல்வம், ஊமச்சிக்குளம்.------சாலையோர குப்பைகள்மதுரை சம்மட்டிபுரம் பொன்மேனி ரோட்டில் சாலையோரங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அப்புறப்படுத்த முன்வர வேண்டும்.-சங்கர், சம்மட்டிபுரம்.------இருளில் தவிக்கிறோம்...மதுரை தெப்பக்குளம் பகலவன்நகர் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் பல மாதங்களாக எரியாமல் உள்ளன. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முகில்வானன், தெப்பக்குளம்.------

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X