உத்திரமேரூர் : உத்திரமேரூர் தண்டுக்கார தெருவில், விபத்து ஏற்படுத்தும் வகையில், சேதமடைந்துள்ள சிறுபாலத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது
உத்திரமேரூர் பேரூராட்சி, தண்டுகார தெரு - பெரிய செங்குந்தர் தெரு சந்திப்பில், மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட, 'கல்வெர்ட்' எனப்படும், சிறுபாலம் சேதமடைந்து, பள்ளம் ஏற்பட்டுள்ளது.சாலையின் நடுவில் பள்ளம் உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, தண்டுகாரத்தெருவில் பழுதடைந்த சிறுபாலத்தை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.