தொல்லியல் எல்.இ.டி., திரை மீண்டும் அமைக்க வலியுறுத்தல் | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
தொல்லியல் எல்.இ.டி., திரை மீண்டும் அமைக்க வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 நவ
2019
23:19

மாமல்லபுரம் : மாமல்லபுரம், கடற்கரைக் கோவில் பகுதியில் இருந்த தொல்லியல் எல்.இ.டி., திரையை, மீண்டும் அமைக்க வேண்டும் என, ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.



மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக்கோவில் உள்ளிட்ட பல்லவர் கால சிற்பங்கள், சுற்றுலாப் பயணியரை, கவர்கின்றன.இவற்றை பராமரித்து, பாதுகாக்கும் தொல்லியல் துறை, சிற்ப பகுதிகளில், பயணியருக்கான வசதிகளை மேம்படுத்துகிறது.மாமல்லபுரம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள தொல்லியல் கலைச்சின்னங்கள், அவற்றின் சரித்திரம், வழித்தட விபரம் உள்ளிட்ட தகவல்களை, எல்.இ.டி., திரையில் ஒளிபரப்ப, தொல்லியல் துறை முடிவெடுத்தது. ஜனவரியில், கடற்கரைக்கோவில் பகுதியில், எல்.இ.டி.,யை அமைத்தது.



மாமல்லபுரம் சிற்பங்களின், பல கோண வீடியோ, பிற சுற்றுலாப் பகுதிகளின், வீடியோ என, காட்சிகள் பதிந்து, ஒளிபரப்பப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், அக்டோபரில், இங்கு சந்தித்த நிலையில், இத்திரை அகற்றப்பட்டது.இதை மீண்டும் அமைக்க, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X