காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகராட்சியில், எங்கு பார்த்தாலும் குப்பை கழிவுகள் கிடப்பதால், துர்நாற்றம் எழுகிறது.
காஞ்சிபுரம் நகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் சேரும் குப்பை கழிவுகளை, சுகாதார பணியாளர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.எனினும், ரங்கசாமி குளம் மற்றும் பாவாப்பேட்டை தெரு ஆகிய பகுதிகளில், குப்பை குவியலாக எப்போதும் கிடக்கிறது. சுகாதார பணியாளர்கள், காலையில் மட்டும் குப்பையை அகற்றுவதால், மாலைக்குள் அப்பகுதியில் குப்பை குவியலாக சேகரமாகிறது.இரண்டு தொட்டி இருக்க வேண்டிய இடங்களில், ஒரு தொட்டி மட்டும் இருப்பதால், குப்பை சேர்ந்தபடியே இருக்கிறது; இதனால் கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது.நகராட்சியின் சுகாதார துறை, இந்த விஷயத்தில் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் செயல்படுவதாக, நகரவாசிகள் கடுமையாக குற்றஞ்சாட்டுகின்றனர்.