| மின் வாரிய அதிகாரி மீது அவதூறு: தொழிற்சங்க கூட்டமைப்பினர் புகார் Dinamalar
மின் வாரிய அதிகாரி மீது அவதூறு: தொழிற்சங்க கூட்டமைப்பினர் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 நவ
2019
04:03

திருப்பூர்:மின்வாரியத்தின் நற்பெயரை கெடுக்கும் வகையில், அவதுாறு பரப்பி வரும் நபர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் செயல்படும், சி.ஐ.டி.யு., - அண்ணா தொழிற்சங்கம், 'எம்ப்ளாயீஸ் பெடரேசன்', பொறியாளர் யூனியன், பொறியாளர் அசோசியேஷன், ஐ.என்.டி.யு.சி., - தொழிலாளர் பொறியாளர், கணக்காளர் களத்தொழிலாளர் சங்கம், மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மின்வாரிய ஜனதா தொழிற்சங்கம், பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள், குற்ற பின்னணி உள்ள நபர் அவதுாறு பரப்புவதாக, புகார் கொடுக்க நேற்று, கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர்.அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், கலெக்டரிடம் நேற்று கொடுத்த மனு:திருப்பூரை சேர்ந்த சரவணன் என்பவர், சமூக வலைதளங்கள் வாயிலாக, மின்வாரியம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மீது தொடர்ந்து அவதுாறு பரப்பி வருகிறார். பொதுமக்களிடம் கட்டணத்தை வசூலித்து, தன்னிச்சையாக இணைப்பு வழங்கி, பணம் வசூலித்த குற்றத்தில் இவரும் தொடர்புடையவர். இவர் மீதான வழக்குகளும் நிலுவையில் உள்ளது.கடந்த 2ம் தேதி, ஆர்.கே., நகர் மின்வாரிய அலுவலகத்தில் நடந்த தகராறில், மின்பாதை ஆய்வாளர் ராஜாவை, கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். மின்வாரிய பணியாளருக்கு, பாதுகாப்பு இல்லை என்று பயந்துள்ளனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குற்ற பின்னணி உள்ள நபர்கள், மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையூறு செய்வதை தடுக்க வேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், சமூக வலைதளங்களில், அவதுாறு பரப்புவதை தடுக்க, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X