மக்கள் விரட்டியதால், திருடர்கள் ஓட்டம்! அவிநாசி போலீசார் 'பாராமுகம்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2019
04:07

அவிநாசி;திருடுவதற்காக வந்த நபர்கள், பொதுமக்கள் விரட்டியதால், டூவீலரை விட்டு, விட்டு தப்பி சென்ற சம்பவம், அவிநாசியில் பரபரப்பை ஏற்படுத்தியது.அவிநாசி கைகாட்டி அருகே வசிக்கும், கோபால், 53, என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் தாளக்கரை சென்றுள்ளார். நள்ளிரவு, 2:00 மணிக்கு, அவரது வீட்டின் அறையில் பீரோவை உடைக்கும் சத்தம், அருகேயுள்ள வீட்டாருக்கு கேட்டுள்ளது.அதே நேரம், அங்கு வசிக்கும் இரு குடும்பத்தினர், ஒரு துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு, வீடு திரும்பியுள்ளனர். கோபால் வீட்டுக்குள் திருடர்கள் புகுந்ததை அறிந்த அவர்கள், திருடர்களை பிடிக்க முயற்சித்தனர். இருப்பினும், மர்ம நபர்கள் தப்பினர்.அந்த இருவரும், புது டூவீலரில் தான், அங்கு வந்துள்ளனர்; இது, அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. மக்கள் விரட்டியதால், டூவீலரை அங்கேயே விட்டு, விட்டு சென்றுவிட்டனர்.அந்த டூவீலர், பதிவு கூட செய்யப்படவில்லை; அப்பகுதியில் உள்ள ஒரு ேஷாரூமில், முழு தொகையையும் கொடுத்து அவர்கள் டூவீலர் வாங்கி உள்ளனர்.ஆதார் அட்டை போலியா?பொதுவாக, முகவரியை உறுதிப்படுத்த, ஆதார் அட்டை போன்வற்றின் நகலை பெற்றுக் கொண்டு தான், நிறுவனத்தினர், டூவீலர் விற்பனை செய்வர். திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அளித்த ஆதார் முகவரியில், கோவை முகவரி குறிப்பிடப்பட்டிருக்கிறது.'வாகன பதிவுக்காக அவர்களை பலமுறை அழைத்தும், வரவில்லை' என, ேஷாரூம் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். எனவே, மர்மநபர்கள், போலி ஆதார் அட்டை தயாரித்து, டூவீலரை வாங்கியுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அடுத்தடுத்த திருட்டு முயற்சிஇதற்கிடையில், கைகாட்டி கமிட்டியர் காலனியில், கோவில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. நேற்று அதிகாலை, ஒரு இளைஞர், திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த சிலர், அவரை வளைத்து பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.அந்த நபர் இந்தி, தமிழ் கலந்து பேசுவதால், பீகார் உட்பட வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறு, தினம் ஒரு திருட்டு என்பது இயல்பாகிவிட்ட நிலையில், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே, போலீசார் இனியும், மெத்தனம் காட்டாமல், தனிப்படை அமைத்து, திருடர்களை கைது செய்ய வேண்டும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X