இப்படியும் கொண்டாடலாம்... 'குழந்தைகள் தினம்!': ஐடியா தரும் மாநகராட்சி பள்ளி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2019
04:09

திருப்பூர்:இன்றைய டிஜிட்டல் கல்வி முறையில் பாடப்புத்தகத்தையே படம் போட்டு கற்பித்து வரும் இவ்வேளையில், சினிமா வையே ஒரு கலையாக குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறது ஓர் அரசுப்பள்ளி.பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவை நடத்தியுள்ளது.


சர்வதேச குறும்பட இயக்குனர் தாண்டவகோன் இயக்கிய படங்கள் உட்பட, 32 திரைப்படங்கள், ஐந்து திரைகளில் பள்ளியில் படிக்கும், 610 மாணவருக்கும் காண்பிக்கப்பட்டது. இதில், பன்னாட்டு படங்களும், 12 குறும்படங்களும் அடக்கம்.பிறமொழி படங்களில், 'சில்ரன் ஆப் ஹெவன், லைப் ஆப் பை, சைல்டு, பாட்டில், கிரா, எல் எம்பலியோ, ப்ளையிங் புக்ஸ், டியூயல், சைல்டு லேபர், ஷூ, தாய்லாந்து குறும்படங்கள், மேஸ்ட்ரோ, மைம், ஓ ஷீப், ரீடு மி, ஸ்மோக்கிங் கில்ஸ், தி வால், தி சைலன்ட் சைல்டு, கலர் பிஷ், பிளாக் ஹோல், பர்னோ அண்ட் ஜூலியட் உள்ளிட்ட படங்களும் திரையிடப்பட்டது.தவிர, முதல் மார்க், பார் சைக்கிள், மீன், காத்து என்ன விலை, பசி, திங்கள், புழுகினி, தப்புக்கணக்கு, அமளிதுமிளி, சோசியல் மீடியா சுப்பிரமணி, மேன், உள்ளிட்ட குறும்படங்கள் காட்டப்பட்டன. வகுப்பிற்கு இரு ஆசிரியர்கள் படத்தினை விளக்கினர்.ஒவ்வொரு பட முடிவிலும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பதிலளித்தனர். பாடல், சண்டைகாட்சி, விறுவிறுப்பு இல்லாது படங்களை பார்ப்பது, வித்தியாசமான அனுபவமாய் இருந்ததாக, குழந்தைகள் தெரிவித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்ய ஜாஸ்மின் மாலா கூறும்போது:குழந்தைகளின் மன உலகை, விருப்பங்களை, கனவுகளை காட்சிப்படுத்தும், குழந்தைகளின் கண்களின் வழியே உலகம் எப்படி தென்படுகிறது என்பதை விவரிக்கும், சிறார்களின் உலகையை அழகாக வெளிப்படுத்தும் படங்கள் ஏராளமாக உள்ளன.


குழந்தைகள் தினத்தன்று வெளிநாடுகளிலும் மட்டுமே குழந்தைகளுக்கான திரைப்பட விழாக்கள் நடக்கும். நம்மூரில் இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை.இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த திரைப்பட விழாவை குழந்தைகள் தினத்திற்காக நடத்தி வருகிறோம். இது பெற்றோரிடமும், மாணவர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல திரைப்படம் மாணவர்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். ஆசிரியர் எர்னஸ்ட் ரிச்சர்ட் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X