| மேம்பாலத்தில் திடீர் பள்ளங்கள்: வாகன ஓட்டிகள் அபாய பயணம் Dinamalar
மேம்பாலத்தில் திடீர் பள்ளங்கள்: வாகன ஓட்டிகள் அபாய பயணம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 நவ
2019
04:29

உடுமலை:உடுமலை, தளி ரோடு மேம்பாலத்தில் தரைதளம் கற்கள் பெயர்ந்து குழியாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அபாய பயணம் மேற்கொள்கின்றனர்.உடுமலை, தளி ரோடு மேம்பாலம், 2009ம் ஆண்டு திறக்கப்பட்டது. மேம்பாலம், 19 கோடி ரூபாய் செலவில், 23 துாண்களுடன் கட்டப்பட்டுள்ளது.அமராவதி அணை, திருமூர்த்தி, மற்றும் மூணாறு செல்வதற்கு, உடுமலையிலிருந்து செல்லும் பிரதான வழியாக உள்ளது.உடுமலையிலிருந்தும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக செல்கின்றன. இந்த பாலத்தில், தற்போது தரைதளம் சிதிலமடைந்து, வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.தரைதளத்தில் கற்கள் பெயர்ந்தும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள், நிலை தடுமாறுகின்றனர். மேலும், இரவில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.கற்கள் பெயர்ந்துள்ள பாலத்தின் தரைதளத்தால், வாகன ஓட்டிகள் அபாயகரமான பயணத்தை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. உயிரிழப்பு ஏற்படும் முன்பு, நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக தரைதளம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X