பெருநகர் முன்மாதிரி பள்ளியில் மாணவர்களுக்கு கையேடு வழங்கல் | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
பெருநகர் முன்மாதிரி பள்ளியில் மாணவர்களுக்கு கையேடு வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 நவ
2019
04:30

உத்திரமேரூர் : தமிழகத்தில் முதல்முறையாக, காஞ்சிபுரம் மாவட்ட, பெருநகர் அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில், மாணவ - மாணவியருக்கு, நாட்குறிப்பு கையேடு வழங்கப்பட்டது.



உத்திரமேரூர் அடுத்த, பெருநகர் முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில், மாணவ - மாணவியருக்கான, திறன் வளர்ப்பு மேம்பாட்டு வகுப்பு துவக்க விழா, நேற்று நடந்தது.காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, இந்த வகுப்பை துவக்கி வைத்து, 'டைரி' எனப்படும், மாணவர்களுக்கான நாட்குறிப்பு கையேடை வெளியிட்டு, பேசியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெருநகர் அரசு மேல்நிலைப் பள்ளி, முன்மாதிரி பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அனைத்து கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முதல்முறையாக, இப்பள்ளி மாணவ - மாணவியருக்கு, நாட்குறிப்பு கையேடு வழங்கப்பட்டு உள்ளது.தனியார் பள்ளிகள், இது போன்ற கையேடில் தான், மாணவர்களின் அன்றாட படிப்பு மற்றும் வீட்டு பாடம் உள்ளிட்டவற்றை குறித்து அனுப்பும்.பெருநகர் முன்மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளி, தமிழகத்தில் சிறந்த முன்மாதிரிப் பள்ளியாக விளங்க வேண்டும்; கல்வி கற்கும் மாணவர்கள், வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X