| மாவட்ட பாதுகாப்பு பணிகள் கூடுதல் டி.ஜி.பி., ஆய்வு Dinamalar
மாவட்ட பாதுகாப்பு பணிகள் கூடுதல் டி.ஜி.பி., ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 நவ
2019
04:30

அயோத்தி தீர்ப்பையொட்டி, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணி குறித்து கூடுதல் டி.ஜி.பி., ஜெயந்த் முரளி ஆய்வு செய்தார்.அயோத்தி வழக்கில் கடந்த 9ம் தேதி தீர்ப்பு வெளியானது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.தொழில் நகரமான திருப்பூரில் பாதுகாப்பு பணியில் கமிஷனர் தலைமையில், 950 பேர் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு பணியை பலப்படுத்தும் வகையில், இங்குள்ள போலீசாருக்கு உதவும் வகையில், திருப்பூர் மாநகர போலீசில், பணியாற்றி பதவி உயர்வு பெற்றும் மற்றும் வேறு இடங்களுக்கு பணிமாறுதலில் சென்ற உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் திருப்பூர் வந்துள்ளனர். அதில், உதவி கமிஷனர்கள் சண்முகசுந்தரம், முத்துசாமி, அண்ணாதுரை, வேலு உள்ளிட்டோர் அடங்குவர். கடந்த இரு நாட்களாக, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஜெயந்த் முரளி ரோந்து மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறார்.திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். இரவில், மாநகர பகுதியில் திடீரென ரோந்து சென்று, பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரை பார்வையிட்டார்.அவர்களுக்கு டீ, பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கவும் அறிவுறுத்தி சென்றார்.- - நமது நிருபர் --

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X