வழிப்பறி கொள்ளையர்கள் கைது | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
வழிப்பறி கொள்ளையர்கள் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 நவ
2019
04:31

திருப்போரூர் : சென்னை, வளசரவாக்கத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 36. இவர், நேற்று மதியம், 2:00 மணிக்கு, கீழ்க்கோட்டையூர் அருகே, நண்பருக்காக காரில் காத்திருந்தார்.அந்த வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், செந்தில்குமாரிடம், வழி கேட்பதுபோல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த, 2 சவரன் நகை, மொபைல் போனை பறித்து சென்றனர்.இதுகுறித்து, தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார், கேளம்பாக்கம், புதுப்பாக்கம், ஓ.எம்.ஆர்., சாலையில் ரோந்து சென்று, புதுப்பாக்கம் அருகே, வழிப்பறி செய்த இருவரை பிடித்தனர்.விசாரணையில் அவர்கள், பூந்தமல்லியைச் சேர்ந்த சந்தோஷ், 24, சேட்டு, 24, என்பது தெரிய வந்தது.இவர்கள், வண்டலுார் அருகே, இதேபோல் மற்றொருவரிடமிருந்து, இரு மொபைல் போன்கள் பறித்ததும் தெரிந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், செயின் மற்றும் மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X