| ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி Dinamalar
ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 நவ
2019
05:05

செஞ்சி:செஞ்சியில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.திருவண்ணாமலை கரியான் செட்டித் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன், 54; ஆட்டோ ஓட்டுனர். இவர், கடந்த மாதம் 25ம் தேதி செஞ்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்றார். செஞ்சி பி ஏரிக்கரை அருகே வந்த போது குறுக்கே மாடு வந்ததால் பிரேக் போட்டதில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது. இதில் நாகராஜனுககு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நாகராஜன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X