செஞ்சி:செஞ்சி அருகே குடும்ப தகராறில் ஒன்றரை வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளம்பெண்ணை பொதுமக்கள் மீட்டனர்.
குழந்தை நீரில் மூழ்கி இறந்தது.செஞ்சி அடுத்த மேல்சேவூர் மதுரா, ஈச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி பார்வதி, 26; இவர், குடும்ப தகராறு காரணமாக நேற்று இரவு 7:00 மணியளவில் தனது ஒன்றரை வயது மகன் ஜெகதீசனுடன் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்தார்.இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக கிணற்றில் மூழ்கிய பார்வதியை மீட்டனர். ஆனால், குழந்தை நீரில் மூழ்கி இறந்தது. தகவலறிந்து வந்த செஞ்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் குழந்தை ஜெகதீசனை மீட்டனர்.செஞ்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.