திடக்கழிவு மேலாண்மை திட்ட மேம்பாடு: உரம் தயாரிப்புக்கு இலக்கு நிர்ணயிக்க கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2019
05:07

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த, உரம் தயாரிப்பதில் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கிராமம் மற்றும் நகரப்பகுதிகளின் துாய்மையை மேம்படுத்த, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், குப்பைக்கழிவுகளிலிருந்து உரம் தயாரித்து விளைநிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், முதற்கட்டமாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறிப்பிட்ட ஊராட்சிகளை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. உடுமலை ஒன்றியத்தில் பெரியகோட்டை மற்றும் சின்னவீரம்பட்டி ஊராட்சிகள் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டன.தொடர்ந்து அனைத்து ஊராட்சிகளிலும, துாய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் சேகரிக்கும் பணிகள் நடக்கிறது. ஆனால், இப்பணிகள் துவக்கத்தில் மட்டுமே முழுமையாக செயல்பட்டன. சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகளை தரம் பிரித்து, உரக்குழிகளில் கொட்ட வேண்டும். தொடர்ந்து, குப்பைக்கழிவுகளிலிருந்து, உரம் பிரிக்கும் பணிகளை மேற்கொள்ள குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், 90 சதவீத கிராமங்களில் இந்த குடில்கள் எந்த பயன்பாடும் இல்லாமல், கால்நடைகளை கட்டுவதற்கான இடமாக மட்டுமே உள்ளது.குப்பைக்கழிவுகளை திறந்த வெளியில் வைத்து எரிக்கின்றனர். உரம் தயாரிக்கும் பணிகள் முழுமையாகவே நடப்பதில்லை. இதனால், பல ஊராட்சிகளில் நுாறு சதவீத துாய்மை பெயரளவில் மட்டுமே உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு, காண, ஊராட்சிகளில் உரம் தயாரிப்பதை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். உரம் தயாரிப்பது மற்றும் அதற்கான விற்பனை குறித்து அரசு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். இதன் மூலம் ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் வேகமடைந்து பயன்பாடு அதிகரிக்கும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X