செவிலிய உதவியாளர் பணி வழங்க கோரும் நலச்சங்கத்தினர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2019
09:33

கரூர்: 'அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலிய உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, செவிலிய உதவியாளர்கள் நலச்சங்க மாநில செயலாளர் சுரேஷ் ராஜா, கலெக்டர் அன்பழகனிடம் மனு கொடுத்தார்.


அதில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவத்துறையில் டாக்டர், நர்ஸ், கம்பவுண்டர் இவர்களுக்கு அடுத்தபடியாக செவிலிய உதவியாளர்கள் உள்ளனர். நோயாளிகளுக்கு இனிமா கொடுப்பது, அறுவை சிகிச்சை அரங்குக்கு செல்வதற்கு முன் நோயாளி யை தயார்படுத்துவது போன்ற பணிகளை இவர்கள் தான் கவனிக்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில், கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக செவிலிய உதவியாளர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால், அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் செவிலியர் உதவியாளர் பணிக்கு படித்த, 1.25 லட்சம் பேர் பணி இல்லாமல் தவிக்கின்றனர். குறிப்பாக ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பெண்கள் அதிகம் பேர், இந்த படிப்பு படித்து உள்ளனர். உரிய வேலை கிடைக்காததால் தனியார் மருத்துவமனையில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிய வேண்டிய அவல நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை, ஆரம்பசுகாதார நிலையங்களில் அவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X