மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் அண்ணன் வீட்டில் சுங்கத்துறை சோதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2019
09:36

கரூர்: கரூர் அருகே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளரின் அண்ணன் வீடு மற்றும் கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.


கரூர் மாவட்டம், மூர்த்திபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 38. இவர், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியிடம், பல ஆண்டுகளாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். சுப்பிரமணியின் அண்ணன் ராசப்பன், 40; மூர்த்திபாளையத்தில், கொசுவலை மற்றும் காய்கள், பழங்கள் போட்டுத்தரும் பை தைக்கும் துணி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று மதியம், 1:00 மணிக்கு, மதுரை மத்திய சுங்கத்துறை கண்காணிப்பாளர் முனியசாமி, 53, தலைமையில், ரமேஷ் பாபு, 48, மோகன், 50, ஆகியோர், ராசப்பனின் வீடு மற்றும் கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.


அதன்பின், சுங்கத்துறை கண்காணிப்பாளர் முனியசாமி கூறியதாவது: கரூர் அருகே புத்தாம்புதூரில், 'குவாலிடி பேப்' என்ற நிறுவனத்தில், நூல் ஆர்டர் எடுத்து, பைகள் தயாரிக்க துணி நெய்து கொடுக்கும் நிறுவனங்களில், கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வருகிறோம். அதில், பைகள் தயாரிக்க எந்த வகையான நூல், மெஷின் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்கிறோம். அந்த வகையில், 'குவாலிடி பேப்'பில் ஆர்டர் எடுத்துள்ள ராசப்பனின், நிறுவனத்திலும் ஆய்வு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, செந்தில் பாலாஜியின், உதவியாளர் சுப்பிரமணியின் அண்ணன் வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடப்பதாக, கரூரில் தகவல் பரவியது. இதனால், தி.மு.க.,வினர் சோதனை நடந்த நிறுவனம் மற்றும் வீடு முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X