| கழிவுநீர் தொட்டியில் கசிந்த விஷ வாயு :தம்பியை, காப்பாற்றிய அண்ணன் பலி Dinamalar
கழிவுநீர் தொட்டியில் கசிந்த விஷ வாயு :தம்பியை, காப்பாற்றிய அண்ணன் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2019
01:05

அண்ணாசாலை:ராயப்பேட்டை, எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கி மயங்கிய தம்பியை, காப்பாற்ற இறங்கிய அண்ணன், பரிதாபமாக இறந்தார்.



சென்னை, ஐஸ் ஹவுஸ், கிருஷ்ணாம்பேட்டையைச் சேர்ந்தவர், தண்டபாணி, 38. அவர், நேற்று அதிகாலை, 4:00 மணியளவில், ராயப்பேட்டை, எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக, அருண்குமார், 25, ரஞ்சித்குமார், 23, ஆகிய சகோதரர்கள் உட்பட, ஐந்து பேரை அழைத்துச் சென்றார்.ரஞ்சித்குமார் கழிவுநீர் தொட்டியில் இறங்கி, சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, மற்றவர்கள் மேலே நின்று, அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தனர்.



இறங்கிய சிறிது நேரத்திலேயே, மூச்சு விட முடியாமல், ரஞ்சித்குமார் மயங்கினார்.உடனே, அவரை காப்பாற்ற, அவரது அண்ணன் அருண்குமார், கழிவுநீர் தொட்டியில் இறங்கினார். தம்பியை மேலே துாக்கிவிட்ட அவர், விஷவாயு தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். ரஞ்சித்குமாருக்கு, சிறிது நேரத்தில் நினைவு திரும்பியது.



அண்ணா சாலை போலீசார், அருண்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர்.சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த பணிக்கு ஆட்களை அழைத்துச் சென்ற தண்டபானியை, கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X