| உலக தரத்தில் நடைபாதை: சென்னையில் இன்று திறப்பு Dinamalar
உலக தரத்தில் நடைபாதை: சென்னையில் இன்று திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2019
01:06

சென்னை:சென்னை, தி.நகரில் அமைக்கப்பட்டுள்ள, உலக தரத்திலான நடைபாதை வளாகத்தை, முதல்வர், இ.பி.எஸ்., இன்று திறந்து வைக்கிறார்.



சென்னை, தி.நகர் பகுதிகளில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், 33 கோடி ரூபாய் செலவில், உலக தரத்திலான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரை, 2,395 அடி நீளமும், தணிகாசலம் சாலை முதல் போக் சாலை சந்திப்பு வரை, 1,247 அடி நீளமும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.




மேலும், போக் சாலை முதல், அண்ணா சாலை வரை, 1,853 அடி நீளம் வரை என, 3 பகுதிகளாக, உலக தரத்திலான நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.இதில், பிரகாசமான தெரு விளக்குகள், நவீன கழிப்பறைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த தேவையான, பேட்டரி கார்கள் இயக்கப்பட உள்ளன.



பணிகள் முடிந்துள்ள நிலையில், பொது மக்களின் பயன்பாட்டிற்கு, முதல்வர், இ.பி.எஸ்., இன்று திறந்து வைக்கிறார். பின், நடைபாதை வளாகத்தை பார்வையிடுவதுடன், நடைபயணமும் மேற்கொள்ள உள்ளார். இதன் வாயிலாக, பாண்டிபஜார் பகுதியில் பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கு, பாதுகாப்பான மற்றும் ரம்மியமான சூழல் ஏற்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X