போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2019
01:10

காவலரிடம் மொபைல் பறித்த சிறுவர்க



பூந்தமல்லி: ஆவடியை சேர்ந்தவர், சிலம்பரசன், 31; போலீஸ்காரர். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, பணி முடித்து, சென்னீர்குப்பம் அணுகுசாலை வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, அழைப்பு வந்ததால், வாகனத்தை சாலையோரம் நிறுத்தி, மொபைலில் பேசினார். அப்போது, மற்றொரு டூ - வீலரில் வந்த மர்ம நபர்கள், சிலம்பரசனை தாக்கி, மொபைலை பறித்து தப்பினர். இச்சம்பவம் தொடர்பாக, பூந்தமல்லி போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுவர்கள் மூன்று பேரை நேற்று கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கைது



அம்பத்துார்: அம்பத்துார் சுற்றுவட்டாரத்தில் உள்ள மின் வாரிய அலுவலகங்களில், 200க்கும் மேற்பட்ட, ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். நேற்று காலை, 10:30 மணியளவில், அம்பத்துார் தொழிற்பேட்டை பஸ் நிலையம் எதிரில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு தங்களுக்கு, தினக்கூலியாக நிர்ணயித்த, 380 ரூபாய் சம்பளத்தை, முழுமையாக வழங்குவது இல்லை. மேலும், 'கேங்மேன்' எனும் களப்பணியிட முறையை, நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், அவர்களை கைது செய்து, பின் விடுவித்தனர்.



இருசக்கர வாகனங்கள் சூறை



புழல்: புழல், சக்திவேல் நகரைச் சேர்ந்தவர், தீபக், 22. இவர், செங்குன்றம், பம்மதுகுளத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்தார். அதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று முன்தினம், தீபக் வீட்டிற்கு சென்ற அவர்கள், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த, ஐந்து இருசக்கர வாகனத்தை அடித்து சேதப்படுத்தினர். புழல் போலீசார் விசாரித்து, லட்சுமிபுரத்தை சேர்ந்த ஏழுமலை, 38, வடிவேல், 36, குமார், 27, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.



ஆட்டோ மீது தாக்குதல்



அண்ணாசாலை: அண்ணாசாலை, வி.என்.தாஸ் சாலையைச் சேர்ந்தவர், காதர்கான், 70; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன், ஆட்டோவை நிறுத்தி இருந்தார். காலையில் பார்த்தபோது, ஆட்டோவின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள, 'சிசிடிவி கேமரா' காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர், கல்லால் அடித்து சேதப்படுத்தியது தெரியவந்தது. அண்ணாசாலை போலீசார் விசாரிக்கின்றனர்.



தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு



கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை, சி.பி.சாலையைச் சேர்ந்தவர், சுதாகர், 40; கூலி தொழிலாளி. நேற்று, கொருக்குப்பேட்டையில் இருந்து, மூலக்கொத்தளத்திற்கு ஆட்டோவில் சென்றார். அப்போது, ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் மூவர், சுதாகரை தாக்கி, அவரிடம் இருந்த, 15 ஆயிரம் ரூபாயை பறித்து, கீழே தள்ளிவிட்டு சென்றனர். இதில் காயமடைந்த சுதாகரை, அருகில் இருந்தோர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.



படகு நிறுத்துவதில் தகராறு



காசிமேடு: காசிமேடைச் சேர்ந்தவர், செல்வமணி, 40. இவர், தன் விசை படகை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தியிருந்தார். காசிமேடு, புதுமனை குப்பத்தைச் சேர்ந்த தினேஷ், 31, என்பவர், 'இங்கு படகு நிறுத்தக் கூடாது; மீறினால் படகை எரிப்பேன்' என, மிரட்டல் விடுத்தார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரிக்கின்றனர்.



கூட்ட நெரிசலில் திருட்டு



கே.கே.நகர்: கே.கே.நகரில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி நின்ற, மூன்று பெண்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள், திருநெல்வேலியைச் சேர்ந்த தேவி, 40, காளியம்மாள், 42, இசக்கியம்மாள், 30, என்பதும், பேருந்துகளில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி, திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, கே.கே.நகர் போலீசார், மூவரையும் நேற்று கைது செய்தனர்.



மூன்று பேருக்கு, 'காப்பு!'



தலைமை செயலகம்: தலைமை செயலகம் அருகே உள்ள, அன்னை சத்யா நகரில், பணம் வைத்து சூதாடுவதாக, கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோட்டை போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த ராயர், 55, நீலகண்டன், 40, ரவி, 56, ஆகியோர் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.



செயின் பறித்த வாலிபர் சிக்கினார்



நுங்கம்பாக்கம்: நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையம் அருகே, நேற்று மதியம், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி நின்ற, செம்மஞ்சேரியைச் சேர்ந்த அறிவழகன், 27, என்பவரிடம் விசாரித்தனர். அவர், செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அறிவழகனை கைது செய்த போலீசார், 3 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.



அதிகாரியை தாக்கிய இருவர் கைது



நீலாங்கரை: சோழிங்கநல்லுார் மண்டலம், 196வது வார்டு சுகாதார ஆய்வாளர் விக்னேஷ்வரன், 30. நேற்று முன்தினம், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மயானத்தை ஆய்வு செய்தார். அங்கு, இரண்டு பேர் அமர்ந்திருந்தனர். அவர்களை, வெளியேற கூறினார். இதில் தகராறு ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து, விக்னேஷ்வரனை சரமாரியாக தாக்கினர். விசாரித்த நீலாங்கரை போலீசார், ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த், 25, அஸ்வின், 26, ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X