| போலீசாருக்கு, 'தண்ணி' காட்டி பெண் கஞ்சா வியாபாரி எஸ்கேப் Dinamalar
போலீசாருக்கு, 'தண்ணி' காட்டி பெண் கஞ்சா வியாபாரி எஸ்கேப்
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2019
01:12

மாதவரம்:இரவில் சிக்கிய பெண் கஞ்சா வியாபாரியை, நிலையத்தில் வைக்க முடியாது என்பதால், தனியார் காப்பகத்தில், போலீசார் தங்க வைத்த நிலையில், அங்கிருந்து அவர் தப்பினார்.



செங்குன்றம் பஸ் நிலையம் அருகே, 8ம் தேதி இரவு, ஆட்டோவில், கஞ்சா பொட்டலங்கள் வைத்து, விற்பனை செய்த, வியாசர்பாடியைச் சேர்ந்த விக்னேஷ், 29. புழலைச் சேர்ந்த விஜய், 20, ஆகியோர் மாதவரம் போலீசாரிடம் சிக்கினர்.விசாரணையில், புழல் சிறையில் உள்ள, கஞ்சா வியாபாரி அஜீத்குமாரின் மனைவி ரம்யா, 23, சிக்கினார்.



மாதவரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து, 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இரவு நேரம் என்பதால், ரம்யாவை காவல் நிலையத்தில் வைக்காமல், மாதவரம், அருள் நகரில் உள்ள, தனியார் பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்தனர். மற்ற இருவரையும், காவல் நிலையத்தில் வைத்தனர்.மறுநாள், உச்ச நீதிமன்றத்தில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு காரணமாக, அனைத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதனால், ரம்யாவிற்கு, போலீஸ் காவல் இல்லை எனக் கூறப்படுகிறது.



இதை பயன்படுத்தி, கஞ்சா வியாபாரி ரம்யா, அங்கிருந்து, அதிகாலையில் தப்பினார். விக்னேஷ் மற்றும் விஜய் சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பியோடிய ரம்யாவை போலீசார் தேடி வருகின்றனர். நேற்று மாலை வரை, அவர் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X