காவலர் உடற்தகுதி தேர்வு அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2019
01:23

சென்னை:காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்கான உடற்கூறு அளத்தல் மற்றும் உடற்தகுதி தேர்வு குறித்து, சென்னை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.



தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, 8,000த்திற்கும் மேற்பட்ட, இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நடத்தியது. இதில், தேர்ச்சி பெற்றோருக்கு, 6ம் தேதியில் இருந்து, உடற்கூறு அளத்தல் மற்றும் உடற்தகுதி தேர்வுகள் நடந்து வந்தன.உச்ச நீதிமன்றம், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியதால், இத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.



தற்போது, மீண்டும், இத்தேர்வுகள், 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என, அறிவிக்கப் பட்டு உள்ளது.அதன்படி, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடக்க உள்ள இத் தேர்வுக்கு, 9ம் தேதிக்கு அழைக்கப்பட்டவர்கள், 18ம் தேதி, காலை, 6:00 மணிக்கு வர வேண்டும்.



அதேபோல, 11ம் தேதிக்கு அழைக்கப்பட்டவர்கள், 19ம் தேதியும், 12ம் தேதிக்கு அழைக்கப் பட்டவர்கள், 20ம் தேதி காலை, 6:00 மணிக்கு வர வேண்டும் என, சென்னை மாநகர போலீசார் நேற்று அறிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X