மணலி:சென்னையில் ஒரே நாளில், மர்ம காய்ச்சலால், இருவர் பலியானது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
மணலி புதுநகர் அருகே வெள்ளிவாயலைச் சேர்ந்தவர் ராமானுஜம், 40; தனியார் நிறுவன ஊழியர். இவர்களது மகன் ரஞ்சன், 12, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் ரஞ்சனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, சில தினங்களுக்கு முன், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரஞ்சன், நேற்று இரவு உயிரிழந்தார்.
கொடுங்கையூர், சின்னான்டி மடத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து, 34. இவரது, 5 வயது மகள் கனிஷ்காவிற்கு, ஐந்து நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.பின், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சேர்த்த நிலையில், நேற்று இரவு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.