கலங்குது கண்கள்: ரோட்டோர ஓட்டல் சமையலறைகளால்; தூசி, கிருமியால் பரவுகிறது தொற்று நோய்கள் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
கலங்குது கண்கள்: ரோட்டோர ஓட்டல் சமையலறைகளால்; தூசி, கிருமியால் பரவுகிறது தொற்று நோய்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2019
04:54

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் ஓட்டல் சமையலறைகள் செயல்படுவதால் சுகாதார கேடு ஏற்படுவதால் இவற்றை முறைப்படுத்த அரசு அறிவுறுத்த வேண்டும்.


ஓட்டல்களில் சமையல் கூடமானது முன்பு உட்புறத்தில் இயங்கி வந்தது. ஓரளவு சுகாதாரம் இருந்தது. தற்போது, பெரும்பாலான ஓட்டல் சமையல் கூடங்கள் ரோட்டோரத்தில் உள்ளன. பல ஓட்டல்களில் உட்பகுதியில் சமையலறைகள் இருந்தாலும் ரோட்டோரம், வாறுகால்கள் மேல் அடுப்புகளை வைத்து சுகாதார மற்ற முறையில் தான் சமைக்கின்றனர்.



புரோட்டா, தோசைகள், ஆம்லெட் போன்றவை திறந்தவெளியில் தான் போடப்படுகின்றன. தயார் செய்யப்படும் உணவுகளில் வாகனங்களின் துாசிகள் படிகின்றன. தோசை கல்லில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்புகள் காற்றில் கலந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்ணை பதம் பார்க்கிறது. திறந்தவெளியில் தான் புரோட்டா அடுக்கி வைக்கப்படுகின்றன. இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்று கோளாறு ஏற்படுகிறது.



இவற்றை கண்காணிக்க வேண்டிய நகராட்சி சுகாதர பிரிவு, உணவு பாதுகாப்பு துறை, நகரமைப்பு பிரிவு கண்டு கொள்ளாமல் உள்ளன.திறந்தவெளியில் இயங்கும் சமையலறைகளை கண்டிக்க வேண்டிய இத்துறைகள் அலட்சியமாக உள்ளன.சமையலறைகளை முறையாக சுகாதாரமான இடத்தில் அமைக்க ஓட்டல் உரிமையாளர்களை அறிவுறுத்த வேண்டும்.



மாலை நேர உணவகங்கள்தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.மலிவு விலை என்பதால் பலரும் இதைதான் நாடுகின்றனர். இதை உண்பவர்கள் நாளடைவில் பெரும் துயரங்களை சந்திக்கின்றனர். இதை அனைத்தும் தெரிந்தும் சுகாதார பிரிவு எதையும் கண்டுக்காது வேடிக்கை பார்க்கிறது.


- டேனியல், தனியார் ஊழியர், அருப்புக்கோட்டை

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X