கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து, நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கருமத்தம்பட்டி அடுத்த தட்டாம்புதுாரை சேர்ந்த ஆறுமுகம் மகன் மயில்சாமி, 40; தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று காலை, வீட்டை பூட்டி விட்டு, மருதமலை சென்றார். மாலை திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு சவரன் மோதிரம் மற்றும் பணம் திருடப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.