தவறி விழுந்த தொழிலாளி பலி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தவறி விழுந்த தொழிலாளி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2019
05:00

சூலுார்:சூலுார் அருகே தனியார் நிறுவனத்தில், 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து வடமாநில தொழிலாளி பலியானார்.உத்தரப்பிரதேச மாநிலம், சோன்பட் மாவட்டத்தை சேர்ந்த பகவான்தாஸ் மகன் ஹரிசங்கர், 22. இவர் சூலுார் அடுத்த பட்டணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த, ஆறு மாதங்களாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று, 10 அடி உயரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்த ஹரிசங்கர், எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X