கோவில்பாளையம்:கோட்டைபாளையம் பொது மயானம் பராமரிப்பு இல்லாமல், திறந்தவெளி கழிப்பிடமாக மாறியுள்ளது.கொண்டையம்பாளையம் ஊராட்சி, கோட்டைபாளையத்தில், பொது மயானம் உள்ளது. இந்த மயானம் பராமரிப்பு இல்லாமல், அவலநிலையில் உள்ளது. மயானத்திற்கு செல்லும் வழியும், உள்பகுதியும், திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.மயானத்திற்கு வருவோர் மூக்கை பிடித்தபடி காரியம் செய்ய வேண்டி உள்ளது. மயானத்தில் இறுதி சடங்கு செய்வோர் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டி நீர் இல்லாமல், காட்சி பொருளாக உள்ளது.மயானத்தின் உள்பகுதியில், முற்செடிகள், புதர்கள் வளர்ந்து நிற்கின்றன. மது பாட்டில்கள், பேப்பர் டம்ளர்கள் குவிந்து கிடக்கின்றன.கொண்டையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய நிர்வாகம், மயானத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.