| 'டியூகாஸ்' நிறுவனத்திற்கு ரூ.5.25 கோடி நிகர லாபம்  Dinamalar
'டியூகாஸ்' நிறுவனத்திற்கு ரூ.5.25 கோடி நிகர லாபம் 
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2019
05:04

பெ.நா.பாளையம்:துடியலுார் டியூகாஸ் நிறுவனத்தில் நடந்த பேரவைக் கூட்டத்தில், கடந்த இரு நிதியாண்டுகளில், 5.25 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டப்பட்டதாக, தகவல் தெரிவிக்கப்பட்டது.துடியலுாரில் விவசாயிகளின் நலனுக்காக, துடியலுார் விவசாய கூட்டுறவு சேவா ஸ்தாபனம் (டியூகாஸ்) இயங்கி வருகிறது. இந்திய அளவில் முக்கிய கூட்டுறவு சங்கமாக செயல்பட்டு வருகிறது.இச்சங்கத்தின், 64ம் பேரவைக்கூட்டம் நடந்தது. தலைவர் சுப்பையன் தலைமை வகித்தார். மேலாண்மை இயக்குனர் விஜயசக்தி, துணை தலைவர் செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்டறிக்கையை செயலாளர் மருதவாணி வாசித்தார். இதில், கடந்த, 2016 முதல், 2018ம் ஆண்டு வரையுள்ள நிதியாண்டுகளில் இந்நிறுவனம் 5.25 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்த நிதியாண்டுக்கான வரவு, செலவு திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.கூட்டத்தில் தலைவர் சுப்பையன் பேசுகையில், ''நிறுவனத்தில், வேப்பம் புண்ணாக்கு, உர உற்பத்தி செய்தல், நீராபானம், ஆவின் பொருட்கள் விற்பனை செய்தல், மண் புழு மற்றும் நுண்ணுாட்டச் சத்து கலவை உரம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன,'' என்றார். கூட்டத்தில், வங்கியின் இயக்குனர்கள் கிருஷ்ணன், ஜெகன்நாதன், சிவக்குமார், பார்த்தசாரதி, நாகராஜ், சந்திரகலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X