சூலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தயக்கம் எதனால்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2019
05:05

சூலுார்:திருச்சி ரோடு விரிவாக்கம் செய்யும் பணிக்காக, சூலுார் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தர, வருவாய்த் துறையினர் சுணக்கம் காட்டி வருகின்றனர்.நாகப்பட்டினம் முதல் கூடலுார் வரை, சூலுார் வழியாக தேசிய நெடுஞ்சாலையான (என்.எச்., 81) திருச்சி ரோடு செல்கிறது. இந்த ரோடு, கரூரில் இருந்து பல்லடம் வரை, பல இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், சூலுார் வட்டத்துக்குட்பட்ட காங்கயம்பாளையம் முதல் சிந்தாமணிப்புதுார் வரை விரிவாக்கம் செய்யப்படவில்லை.ஆபத்தான வளைவுகள், குறுகிய பாலங்கள் மற்றும் அகலமில்லாத ரோட்டால் தினமும் விபத்துகள் நடப்பதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளன. விபத்தில் சிக்கி உடலுறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.ரூ.30 கோடி நிதிஇதனால், ஆவேசமடைந்த சூலுார் வட்டார மக்கள், சாலை விரிவாக்கத்தை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் பயனாக, ரோடு விரிவாக்க பணிக்கு, மத்திய அரசு, ரூ.30 கோடி நிதி ஒதுக்கியது. இரு கட்டமாக விரிவாக்க பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக பாப்பம்பட்டி பிரிவு முதல், காங்கயம்பாளையம் வரை பணிகள் நடக்கின்றன.ஆனால், சூலுார் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும், அளவீடு செய்யாமலும் பணிகள் நடந்தன. அதிருப்தி அடைந்த பா.ஜ., - தே.மு.தி.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர், மற்றும் பல தன்னார்வ அமைப்பினர் சார்பில், அமைச்சர், எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் காலதாமதம் செய்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், லோக்சபா தேர்தலுக்கு முன்பே, அளவீடு செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது. லோக்சபா மற்றும் சூலுார் இடைத்தேர்தலை காரணம் காட்டி, காலம் தாழ்த்தி வந்தது வருவாய்த்துறை.கண்துடைப்புக்காக ஒரு நாள் மட்டும் கலங்கல் ரோடு முதல் அரசு மருத்துவமனை வரை அளவீடு செய்தனர். தேர்தல் முடிந்து ஐந்து மாதங்கள் ஆகியும், மீண்டும் அளவீடு செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறையினரும் மற்ற இடங்களில் நடக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.அரசியல் தான் காரணம்!சூலுார் மக்கள் கூறுகையில், 'ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்கூடாக தெரிகிறது. அவற்றை அகற்ற கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும் பலனில்லை. அளவீடு செய்து தரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வருவாய்த்துறையினர் தயங்குவது எதனால் என்பது தெரியவில்லை. ரோடு விரிவாக்கத்தில், எவ்வித அரசியல் காரணங்களுக்காகவும் அசைந்து கொடுக்க கூடாது' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-நவ-201908:02:07 IST Report Abuse
Sriram V Government officials would have taken commission and paid it to their bosses in opposition parties. Both ruling parties are cheating the public, they don't have control over corrupt officials
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X