'ஏர் ஹாரன்கள்' பறிமுதல்
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் அருப்புக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத் வாகன சோதனை செய்தார். தனியார் மற்றும் அரசு பஸ்களில் அனுமதியின்றி அதிக ஒலி ஒலிக்கும் 'ஏர் ஹாரன்' களை 10க்கு மேற்பட்ட பஸ்களில் கழற்றப்பட்டது. இது தொடரும் என எச்சரித்தார்.
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார்
நகராட்சியில் அடிப்படை பிரச்னைகளை தீர்க்ககோரி
மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டகுழு உறுப்பினர் திருமலை தலைமை வகித்தார். மாவட்ட செயலர் அர்ஜீனன், செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி, ரேணுகாதேவி பங்கேற்றனர்.