| தென் மண்டல மகளிர் கால்பந்து போட்டி Dinamalar
தென் மண்டல மகளிர் கால்பந்து போட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2019
23:24

சிதம்பரம் : தென்மண்டல பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான மகளிர் கால்பந்து போட்டியில் அண்ணாமலை பல்கலைக் கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.



பல்கலைக் கழக விளையாட்டுத் துறை சார்பில் தென்மண்டல பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான மகளிர் கால்பந்துப் போட்டிகள் கர்நாடகா மாநிலம், பெங்களூரு கிரைஸ்டு பல்கலைக் கழக விளையாட்டு மைதானத்தில் நடந்தது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.இதில், பங்கேற்ற சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மகளிர் கால்பந்து அணி, விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிப் பெற்றது. இறுதிப் போட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக் கழக அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.2வது மற்றும் 3, 4வது இடங்களை முறையே கோழிக்கோடு பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம் பிடித்தன.வெற்றிப் பெற்ற மகளிர் கால்பந்து அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் பேராசிரியர்கள் ராஜசேகரன், சிவக்குமார் ஆகியோரை பல்கலைக் கழக துணைவேந்தர் முருகேசன் பாராட்டினார். கலைப்புலம் முதல்வர் ஞானதேவன், உடற்கல்வித் துறை இயக்குனர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X