கடலுார் : சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. புதுநகர் போலீசார், பேரணிக்கு அனுமதி மறுத்தனர். அதனைத் தொடர்ந்து, பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். சின்னசாமி, செல்லவேல், ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். செயலர் மச்சேந்திரன் விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், வெங்கடேசன், வெங்கடாசலம், காசிநாதன் வாழ்த்திப் பேசினர். காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பொருளாளர் வேலு நன்றி கூறினார்.