| கோட்டக்கரை கிராமத்தில் மூடிக் கிடக்கும் நுாலகம் Dinamalar
கோட்டக்கரை கிராமத்தில் மூடிக் கிடக்கும் நுாலகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2019
23:33

திண்டிவனம் : கோட்டக்கரை கிராமத்தில், பூட்டிக்கிடக்கும் நுாலகத்தால், அப்பகுதி இளைஞர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.



வானுார் அடுத்த கோட்டக்கரை கிராமத்தில், கடந்த 2010 - 11ம் ஆண்டு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கிராமப்புற நுாலகம் கட்டி திறக்கப்பட்டது.இதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் படித்து பயனடைந்து வந்தனர். துவக்கத்தில் நன்றாக செயல்பட்ட நுாலகம், திடீரென எவ்வித அறிவிப்புமின்றி பூட்டப்பட்டது.இதனால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினசரி தகவல்களை தெரிந்து கொள்ள முடியாமல் சிரமம் அடைகின்றனர். மேலும் கட்டடத்தில் உள்ள புத்தகங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.



இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், இப்பகுதி மக்களுக்காக திறக்கப்பட்ட நுாலகம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதன் பிறகு, நுாலகம் மூடப்பட்டது. இதனால் தினந்தோறும் நாளிதழ் படிக்கவும், புத்தகங்கள் படிக்கவும் எங்களால் முடியவில்லை. எனவே, நுாலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X