காமராஜர் துவக்கிய அரசு பெண்கள் பள்ளி : மாணவியர் சேர்க்கையை அதிகரிக்க வியூகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2019
23:45

திருவொற்றியூர்:காமராஜர் துவக்கிய அரசு பள்ளி ஒன்று, சேர்க்கை குறைவு காரணமாக, மூடும் நிலைக்கு சென்று, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியைகள் முயற்சியால், மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது.



திருவொற்றியூர், சாத்துமா நகரில், 1962ல், அன்றைய முதல்வர் காமராஜர் அடிக்கல் வைத்து துவக்கிய, கன்னியா குருகுலம் வாசுகி பெண்கள் உயர் நிலைப் பள்ளி உள்ளது.



தனியார் பராமரிப்பில் இருந்த பள்ளி, 1977ல், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக மாறியது. ஆரம்பத்தில், நுாற்றுக்கணக்கான மாணவியர் படித்து வந்த நிலையில், காலப்போக்கில் எண்ணிக்கை குறைந்தது.கடந்த, 2016ல், 42 மாணவியருடன், மூடும் நிலைக்கு பள்ளி தள்ளப்பட்டது. இதற்கிடையில் தான், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்க்கையில், வழக்கமான நடைமுறையை கைவிட்டு, நுாதன முறையில் களம் இறங்கினர்.



பள்ளி குறித்த, பெற்றோரின் எண்ணத்தை மாற்ற, மாதாந்திர கூட்டம், பள்ளியில், அரசு வழங்கிய, ஸ்மார்ட் வகுப்பறை, 11 கணினிகள், எஸ்.ஆர்.எப்., நிறுவனம் வழங்கிய, நான்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் என, நவீனமாக மாறியது.பல ஆண்டுகள் கழித்து, 2018ல் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகள், கல்வி சுற்றுலா, தனியார் தொண்டு நிறுவனங்கள், முன்னாள் எம்.எல்.ஏ., ஆகியோரால் பள்ளியில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன.



திருவொற்றியூர், எம்.எல்.ஏ., நிதியில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆறு வகுப்பறை கட்டடங்களுக்கு அடிக்கல் போன்றவை குறித்து பெற்றோரிடம் தெளிவாக விளக்கி, அவர்களுக்கு நம்பிக்கை அளித்தனர்.வழக்கமாக, தெருக்களில் விழிப்புணர்வு பேரணி நடத்தியோடு நிற்காமல், பெற்றோரிடம் துண்டறிக்கை வழங்கி, பக்கத்து வீடுகளில் வினியோகிக்க செய்தனர்.




அரசு மற்றும் தனியார் தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவியரை, பள்ளி நிர்வாகத்தின் அனுமதியோடு, பள்ளியிலேயே சந்தித்து, 6ம் வகுப்பில் தங்கள் பள்ளியில் சேர்க்க, பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கி வருகின்றனர்.இதன் விளைவாக, 42 ஆக இருந்த மாணவியர் எண்ணிக்கை, முறையே, 57, 87 என படிப்படியாக உயர்ந்து, நடப்பாண்டில், 110 ஆக உயர்ந்துள்ளது.




இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியை பி.எஸ்.இந்துமதி கூறியதாவது:பள்ளியில் உள்ள, 6 ஆசிரியர்களும், மாணவர் சேர்க்கையில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தனர். அரசு மற்றும் தனியார் ஆரம்ப பள்ளிகளில், மாணவியரை சந்தித்து, சேர்க்க முயற்சித்தோம்.படிப்படியான முன்னேற்றம் இருந்தது. சில தனியார் பள்ளிகளில், மணிக்கணக்கில் காத்திருந்த அனுபவமும் உண்டு.



கடந்த, 2018ல், எஸ்.ஆர்.எப்., நிறுவனம் ஒரு நிமிட போட்டிகள் நடத்தியது.அதில், மாணவியரின், பன்முகத் திறமையை பார்த்து, தனியார் நிறுவனங்கள், பல உதவிகள் செய்து வருகின்றனர். மாணவியருக்கு, கல்வி சுற்றுலா, 2018ல் ஆண்டு விழா நடத்தி, மற்றவர்களுக்கு பள்ளியின் செயல்பாடுகளை, வெளிப்படுத்தினோம்.மாணவியர் எண்ணிக்கையை, 1,000 ஆக உயர்த்த வேண்டும். அதுவே எங்கள் இலக்கு.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X