| விழுப்புரத்தில் சாராய பாக்கெட் விற்பனை ஜோர்; சாலையோரம் மது அருந்தும் அவலம் Dinamalar
விழுப்புரத்தில் சாராய பாக்கெட் விற்பனை ஜோர்; சாலையோரம் மது அருந்தும் அவலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2019
23:49

விழுப்புரத்தில் சாராய பாக்கெட் விற்பனை ஜோராக நடைபெறுவதையொட்டி, குடிமகன்கள் சாலையோரத்தில் மது அருந்தும் அவலம் தொடர்கிறது.



விழுப்புரம் மாவட்டத்தில், எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில், அனைத்து சோதனைச் சாவடிகளிலும், மதுவிலக்கு போலீசார், மற்ற இடங்களில் சட்டம், ஒழுங்கு போலீசாரும் தீவிர வாகன சோதனை நடத்தி, புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இது மட்டுமின்றி, தொடர் சாராய விற்பனை, கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறித்து, தடுப்பு காவலில் கைது செய்யும் நடவடிக்கையும் தொடர்கிறது.



வெளிமாநில மது பாட்டில்களை தடுப்பதில் தீவிரம் காட்டும் போலீசார், உள்ளூரில் நடைபெறும் சாராய பாக்கெட்டுகள் விற்பனையை ஒழிப்பதில் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளனர்.இதனால், விழுப்புரம் நகரில் பல இடங்களில் சாராய பாக்கெட்டுகள் விற்பனை பட்டப் பகலிலேயே களை கட்டி வருகிறது. இந்த விற்பனையை பெரும்பாலும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களே, பினாமி பெயரில் நடத்துவதால், போலீசார் பலரும் அதை ஒழிப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.



இதன் விளைவாக குடிமகன்கள் பலரும், நகரில் போக்குவரத்து நிறைந்த சாலையிலேயே பட்டப்பகலில் பாக்கெட்டுகளை வாங்கி வந்து குடிக்கின்றனர்.இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பெண்கள் பலரும் முகத்தை சுளித்து கொண்டே செல்கின்றனர். காவல் துறை எந்தவித பாராபட்சமின்றி, கணக்கிற்காக சில சாராய வழக்குகளை மட்டும் போடாமல், முற்றிலுமாக விழுப்புரத்தில் தலைதுாக்கியுள்ள சாராய பாக்கெட் தொழிலை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



நமது நிருபர்

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X