மீன் கழிவால் துர்நாற்றம்வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் மீன்கடை கழிவுகளை சாக்கடை வடிகாலில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. வடிகால் பாதையிலும் அடைப்பு ஏற்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கண்ணன், வடமதுரை.சேதமடைந்த ரோடுஆத்தூர் ஒன்றியம், போடிக்காமன்வாடி- - சித்தையன்கோட்டை ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிப்படுகின்றனர். ரோட்டைச் சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் முன்வர வேண்டும்.--வி.முத்துராஜ், போடிக்காமன்வாடி.தொடரும் விபத்துகள்செம்பட்டி- - ஒட்டன்சத்திரம் ரோட்டில், கெப்புசோலைப்பட்டி ரோடு சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. மெயின் ரோட்டில் தெளிவான வெள்ளை கோடுகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும்.-- எஸ்.சங்கர், மேட்டுப்பட்டி.போக்குவரத்து நெரிசல்ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்ட் மேற்கு பகுதி, பழநி ரோட்டில் இரு சக்கர வாகனங்கள், சிறுவியாபாரிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--சீனிவாசன், ஒட்டன்சத்திரம்.சேதமான நிழற்கூடம்புத்துார் பஸ் நிறுத்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடம் சேதமடைந்து, இருக்கைகள் இல்லாமல் உள்ளது. பயணிகள் கால்கடுக்க நின்று கொண்டிருக்கின்றனர். முதியோர், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். அதனை சீரமைக்கவோ அல்லது புதிய பயணியர் நிழற்கூட அமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராமன், புத்துார்.தெருவிளக்கு தேவைசின்னாளபட்டி அஞ்சும் காலனியில் போதிய தெருவிளக்கு வசதி இன்றி, பல தெருக்களில் இருள் சூழ்ந்துள்ளது கூடுதலாக தெருவிளக்கு அமைக்க பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.--கே வரதராஜன், சின்னாளபட்டி.----கழிவுகளால் துர்நாற்றம்ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், குட்டத்துப்பட்டியில், வணிக நிறுவன இறைச்சி கழிவுகளை ரோட்டோரங்களில் குவிக்கின்றனர். மழைக்காலங்களில் துர்நாற்றத்துடன், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.--வி.குமரகுரு, குட்டத்துப்பட்டி.ரோட்டில் பள்ளம்ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோயில் எதிரில் இருந்து மார்க்கெட் பைபாஸ் ரோட்டை இணைக்கும் ரோட்டில் பெரிய பள்ளம் உள்ளது. பலநாட்களாக சரிசெய்யப்படாததால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. -வெற்றிவேல், ஒட்டன்சத்திரம்.