திண்டுக்கல்:பழநி தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நவ.15 காலை 10:00 மணிக்கு நடக்க உள்ளது.முகாமில் காது, மூக்கு, தொண்டை, மனநலம், கண் பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்கப்படும். அதன்படி, அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம். இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரேஷன், ஆதார் கார்டு நகல், புகைப்படத்துடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என, கலெக்டர் விஜயலட்மி தெரிவித்துள்ளார்.