கொள்ளையர் கைது | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
கொள்ளையர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
00:26

வேடசந்துார்,:வேடசந்துார் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி, ரூ.4.29 லட்சம் வழிப்பறி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.வேடசந்துார் அழகாபுரியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளர் வெள்ளைச்சாமி. சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக்கில் வசூல் பணம் ரூ.4.29 லட்சத்துடன் வங்கிக்கு டூவீலரில் சென்றார். -தமுத்துப்பட்டி அருகே, மற்றொரு டூவீலரில் வந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி பணத்தை பறித்து சென்றனர். டி.எஸ்.பி.,சிவக்குமார் தலைமையில் போலீசார் விசாரித்தனர்.பைக் திருட்டு வழக்கில், திருப்பூரை சேர்ந்த தங்கவேலை 45, பிடித்து கோவை போலீசார் விசாரித்தனர். அதில் வேடசந்துாரில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணத்தை பறித்ததும், கூவக்காபட்டியை சேர்ந்த இருவர் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. எனவே கூவக்காபட்டி மில் தொழிலாளி மருதுபாண்டியிடம் 28, விசாரித்தனர். அவருக்கு உறவினர் ஆறுமுகம் 45 உடந்தையாக இருந்ததாக தெரிவித்தார். இருவரையும் வேடசந்துார் போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X