திண்டுக்கல்:திண்டுக்கல்லில் அமைதி அறக்கட்டளை, சைல்டு வாய்ஸ், வானவில் நிறுவனங்கள் இணைந்து தன்னார்வலர்கள் மாநாடு நடந்தது.தன்னார்வலர் சிவரஞ்சனி வரவேற்றார். சைல்டு வாய்ஸ் இயக்குனர் அண்ணாதுரை மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கினார். ப்ரீடம் பண்ட் நிறுவன திட்ட ஆலோசகர் திரிபுரசுந்தரி, இடம் பெயர்ந்தோருக்கான பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு குறித்து பேசினார். டாக்டர் பால் பாஸ்கர், இடம்பெயர்ந்தோருக்கான பாதுகாப்பில் அரசு மற்றும் தனியார் துறையின் பங்கு குறித்து பேசினார்.குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, சமூக நலத்துறை அலுவலர் முத்துமீனாள், குடும்ப வன்முறை சட்டம் பாதுகாப்பு அலுவலர் சுதா பங்கேற்றனர்.