முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே பருவ மழையால் பருத்தி செடிகள் செழித்து வளர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.
முதுகுளத்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பருவ மழை, கோடை மழை பொய்த்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த ஆண்டு முதுகுளத்துார் அருகே சாலை, பூக்குளம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் மூன்றில் ஒரு பகுதி நிலத்தில் பருத்தி விவசாயம் செய்துள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பருவ மழை பெய்து வருதால் பருத்தி செழிப்பாக வளர துவங்கியது. கால்நடைகளிடம் இருந்து செடிகளை பாதுகாக்க வயலை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பருத்தி செடிகள் நன்கு செழித்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை ஊரணி, பண்ணைக்குட்டைகளில் சேமித்து வைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.